பழைய பாசமா? மாஜியால் அதிமுகவில் எழுந்த சலசலப்பு

 
p

தொழிலதிபர் மாபா பாண்டியராஜன் பாஜகவில் இருந்து அதன் பின்னர் தேமுதிகவுக்கு சென்றார்.   பின்னர் அதிமுகவில் இணைந்து அமைச்சரானார்.  தற்பொழுது அவர் அதிமுகவின் தோல்விக்கு பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். 

 ஓபிஎஸ் -எடப்பாடி என்று இரு அணிகளாக நிற்கும் போது எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் மாபா பாண்டியராஜன்.   ஆனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அவர் பக்கம் நின்றவர் இந்த மாபா பாண்டியராஜன். 

p

 இந்நிலையில் அதிமுக சார்பில் சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாபா பாண்டியராஜன் பங்கேற்றார்.   அதில் பேசிய அவர் ,   தமிழகத்தில் பாஜக வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே .  பாஜக எங்களின் தோழமைக் கட்சி.  அவர்களின் செயல்பாடு நன்றாக இருக்கிறது . தோழமைக் கட்சி வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்திருக்கிறார்.

 அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன மாபா பாண்டியராஜன் அதிமுகவில் இருந்து கொண்டே பாஜகவின் வளர்ச்சியை பார்த்து பெருமைப்படுகிறேன் என்று சொல்லி இருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அவர் மேலும், தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பாஜக தான்  எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது பாஜக . இந்த நிலையில் மாபா பாண்டியராஜன் பாஜகவின் வளர்ச்சியை பார்த்து பெருமைப்படுவதாக சொல்லி இருப்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.