சபரீசனுக்கு ஹலோ, ஹாய் சொல்ல ஒரு மணி நேரமா? காயத்ரி ரகுராமுக்கு பாஜகவினர் கேள்வி

முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் சோமர் செட் ஹோட்டலில் ஒரு மணி ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் காயத்ரி ரகுராம் என்று பாஜகவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால் காயத்ரி ரகுராமை நீக்கம் செய்தது, சரியான நேரத்தில் தலைவர் எடுத்த சரியான முடிவு என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அமர் பிரசாத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள காயத்ரி ரகுராம், முட்டாளே அது என் நண்பரின் பிறந்தநாள். அவர் என்னையும் சில பேசன் நண்பர்களையும் அழைத்து இருந்தார் . சபரீசன் உள்ளிட்ட பலரையும் அழைத்து இருக்கின்றார். அது ஒரு எதிர்பாராத சம்பவம். ஹாய் மற்றும் ஹலோ சொல்வது என் டீசென்சி. முகத்தை திருப்பிக் கொண்டு போக நான் முதிர்ச்சியற்றவள் அல்ல. பிரதமர் மோடி கூட அரசு விவகாரங்களில் ஸ்டாலினை சந்திக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
சபரீசன் உடன்என்ன பேச்சு காயத்ரிக்கு pic.twitter.com/21GkyHDSpX
— Kalai Devi.B .பாரதிய ஜனதா கட்சி (@KalaideviB) November 23, 2022
இதற்கு பாஜகவினர் பலரும் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் . ஹலோ .. ஹாய் சொல்ல ஒரு மணி நேரமா? என்று கேட்டு வருகின்றனர். மேலும், Hello & Hi சொல்ல ஒரு மணி நேரம் என்பதே வியப்பாக உள்ளது. விசாரிச்சா இன்னும் எத்தனை உண்மை வெளிவரும்னு தெரியல. முதலில் பொதுவெளியில் புலம்புவதை நிறுத்தியிருந்தாலே அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்திருக்கலாம். அது இன்னும் தொடர்வது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது என்று சொல்லி வருகின்றனர்.
சபரீசன் உடன் ஒரு மணி நேரம் என்ன பேச்சு வேண்டி கிடக்கு? இதே பாஜகவில் வேறு யாராவது செய்து இருந்தால் திமுகவின் உளவாளி என்று சொல்லி குற்றம் சாட்டி எங்கள் குடும்பத்தையே தூற்றி இருப்பீர்கள். ஆனால் நீங்கள் மட்டும் ஒரு மணி நேரம் திமுக பிரமுகருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நாங்கள் மட்டும் என்ன முட்டாளா? என்றும் கேட்டு வருகிறார்கள்.