சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குற்றங்களும், ஊழல்களும் அதிகரித்ததுதான் அதன் முன்னேற்றம்... அமித் ஷா தாக்கு

 
காங்கிரஸ்

சத்தீஸ்கரில் தற்போது உள்ள காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குற்றங்களும், ஊழல்களும் அதிகரித்ததுதான் அதன் முன்னேற்றம் என்று அமித் ஷா விமர்சனம் செய்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் 90 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்காக இப்போதே பா.ஜ.க. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: 2009ம் ஆண்டில் நாட்டில் மாவோயிஸ்ட் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 2,258ஆக இருந்தது. இது 2021ம் ஆண்டில் 509ஆக குறைந்துள்ளது.

அமித் ஷா

2024 மக்களவை தேர்தலுக்கு முன் நாட்டை மாவோயிசம் இல்லாத நாடாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் குற்றங்களும், ஊழல்களும் அதிகரித்ததுதான் அதன் முன்னேற்றம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.