நாட்டை முழுமையாகவும், சுதந்திரமாகவும் மாற்ற வேண்டுமானால், கிராமங்களை மேம்படுத்த வேண்டும்.. அமித் ஷா
நாட்டை முழுமையாகவும், சுதந்திரமாகவும் மாற்ற வேண்டுமானால், கிராமங்களை மேம்படுத்த வேண்டும், இது மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் தொடங்கியது என அமித் ஷா தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று குஜராத்தில் கிராமப்புற மேலாண்மை பயிலகத்தின் 41வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்று காந்தி ஜி கூறினார். எனவே நீங்கள் இந்த நாட்டை முழுமையாகவும், சுதந்திரமாகவும் மாற்ற வேண்டுமானால், கிராமங்களை மேம்படுத்த வேண்டும். 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் இது (கிராமங்கள் மேம்படுத்துதல்) தொடங்கியது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசு கிராமப்புற வளர்ச்சியை நோக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. கிராமங்களை வசதியாக மாற்றுவதே கிராமப்புற வளர்ச்சியின் அம்சம். இதற்கு கிராமங்களுக்கு தொலைதூர இணைப்பு அவசியம். கிராமத்தில் மின்சாரம் இல்லை, நாங்கள் அவர்களுக்கு (கிராமங்களுக்கு) வழங்கினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமையன்று அமித் ஷா டையூ நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ராகுல் பாபா எப்போதும் மோடி அரசை விமர்சித்து வருகிறார்.
அவரிடம் எனது கேள்வி, உங்கள் 4 தலைமுறைகள் ஆட்சி செய்தீர்கள், 58 ஆண்டுகள் ஆட்சி செய்தீர்கள், ஏழைகளுக்கு என்ன செய்தீர்கள்? எங்கள் அரசு ஏழைகளுக்கு வீடு, கழிப்பறை, மின்சாரம் வழங்கியது. காங்கிரஸ் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் ஏழைகளை ஒழிக்க பாடுபட்டது. பா.ஜ.க. மற்றும் மோடி அரசு வறுமையை ஒழிக்க பாடுபட்டது என தெரிவித்தார்.