ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை கண்டு நடுங்கும் சந்திரசேகர் ராவ்.. எங்களுக்கு பயம் இல்லை.. அமித் ஷா தாக்கு

 
கே.சந்திரசேகர் ராவ்

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை கண்டு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பயப்படுகிறார். ஆனால் ஏ.ஐ.எம்.ஐ.எம். அல்லது டி.ஆர்.எஸ். பற்றி பயப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் குமாரின் இரண்டாம் கட்ட பாத யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித ஷா பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசுகையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகியவற்றை கடுமையாக தாக்கினார். அந்த கூட்டத்தில் அமித் ஷா கூறியதாவது: பா.ஜ.க. தொண்டர்கள் பட்டப்பகலில் கொல்லப்படுகிறார்கள். 

அமித் ஷா

கே.சி.ஆர். (தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்) தெலங்கானாவை வங்காளமாக மாற்ற விரும்புகிறார் அதை நீங்கள் அனுமதிப்பீர்களா?. அவை நிறுத்தப்பட வேண்டும். தற்கொலை செய்து கொலை கொண்ட சாய் கணேஷ் கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வோம். கே.சந்திரசேகர் ராவ் தனது 5 ஸ்டார் பண்ணை வீட்டில் அமர்ந்து முன் கூட்டியே தேர்தலுக்கு செல்வது குறித்து சிந்திக்கிறார். நீங்கள் எப்போது தேர்தலுக்கு சென்றாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏ.ஐ.எம்.ஐ.எம். பயம் காரணமாக டி.ஆர்.எஸ். தலைவர் 370வது பிரிவை நீக்குவதை எதிர்த்தார். 

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

நாங்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம். அல்லது டி.ஆர்.எஸ். பற்றி பயப்படவில்லை. மோடி 370வது பிரிவை நீக்கி விட்டார். தெலங்கானா உதயத்தை கொண்டாடுவதாக கே.சி.ஆர். உறுதியளித்தார். ஆனால் அவர்கள் இப்போது கொண்டாடுகிறார்களா? ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு பயந்து கொண்டாடவில்லை,நாம் தெலங்கானா உதய தினத்தை கொண்டாடுவோம். டி.ஆர்.எஸ். கட்சியின் சின்னம் கார், காரின் ஸ்டீயரிங் எப்போதும் உரிமையாளர் அல்லது டிரைவரின் கையில்தான் இருக்கும். ஆனால் டி.ஆர்.எஸ். கட்சியின் கார் ஸ்டீயரிங் அசாதுதீன் ஓவைசியிடம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.