அசாமை சிதைவு, தீவிரவாதம், வேலைநிறுத்தங்கள் மற்றும் கிளர்ச்சிகளின் பூமியாக மாற்றி விட்டது.. காங்கிரஸ் கூட்டணி அரசை சாடிய அமித் ஷா

 
அமித் ஷா

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் பெரும் நிலமான அசாமை சிதைவு, தீவிரவாதம், வேலைநிறுத்தங்கள் மற்றும் கிளர்ச்சிகளின் பூமியாக மாற்றி விட்டது என்று அமித் ஷா குற்றம் சாட்டினார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா 3 நாள் பயணமாக அசாம் சென்றுள்ளார். அசாமில் கவுகாத்தில் புதிதாக கட்டப்பட்ட பா.ஜ.க. அலுவலகத்தை அமித் ஷா திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: திருப்திபடுத்துவதற்காக, ஆட்சிக்கு வந்தால் வடகிழக்கில் இருந்து ஆயுத படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை நீக்க வேண்டும் என்று காங்கிரஸூ ராகுல் காந்தி ஒரு அஜண்டா கொடுத்தார். என்னிடம் கேட்ட போது, முதலில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்துவோம், பிறகுதான் ஆயுத படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை அகற்றுவோம் என்று சொன்னேன், இது வெறும் திருப்திப்படுத்துவதற்காக நடக்காது.  

காங்கிரஸ்

ஒரு பா.ஜ.க. தொண்டருக்கு அலுவலகம் என்பது கட்டிடம் அல்ல, அலுவலகம் என்பது உணர்ச்சிகளின் மூட்டை.இங்கே வேலை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் ஒட்டு மொத்த வடகிழக்கு இந்தியா மற்றும் அசாமின் வளர்ச்சிக்கான திட்டங்கள் இங்குதான் வகுப்பட்டுள்ளன. எனது வித்யார்த்த பரிஷத் நாட்களில், அசாமில் தனித்து ஆட்சி அமைப்போம் என்று நாங்கள் நினைத்து பார்த்ததில்லை, ஆனால் இன்று மாநிலத்தில் பா.ஜ.க.வின் தொடர்ச்சியான ஆட்சி அனைத்து துறை வளர்ச்சியை உறுதி செய்கிறது. 2014 முதல் 2022 வரையிலான குறுகிய காலத்தில், ஒட்டு மொத்த வடகிழக்கு மற்றும் அசாம் இன்று வளர்ச்சி பாதையில் பயணிக்க தொடங்கியிருப்பதில் நான் இன்று மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 

பா.ஜ.க.

வடகிழக்கு மற்றும் பா.ஜ.க. (இங்கே வடகிழக்கில்) இரணடின் வளர்ச்சியும் கைகோர்த்துச் செல்வது என்னை போன்ற ஒரு தொண்டருக்கு நல்ல அதிர்ஷ்டம். அசாமில் உள்ளடங்கிய வளர்ச்சி இல்லை என்றால், அது வடகிழக்கு மாநிலத்துக்கு பெரும் பிரச்சினையாகி விடுடம் என்று மக்கள் எப்போதும் கவலைப்பட்டனர். அசாமின் புனிதமான மற்றும் அமைதியான நிலத்தை பிளவுப்படுத்தும் நிலமாக மாற்றுவதற்கு எப்போதும் ஆர்வமாக இருந்த காங்கிரஸ்தான் அடிப்படை காரணம். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் பெரும் நிலமான அசாமை சிதைவு, தீவிரவாதம், வேலைநிறுத்தங்கள் மற்றும் கிளர்ச்சிகளின் பூமியாக மாற்றி விட்டது. வடகிழக்கை அதன் வளர்ச்சிக்கு முக்கிய நீரோட்டத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தீர்மானம் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.