காங்கிரஸ் நாட்டை விட்டு மறைந்து வருகிறது, உலகம் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழித்துக் கொண்டிருக்கிறது.. அமித் ஷா

 
அமித் ஷா

காங்கிரஸ் நாட்டை விட்டு மறைந்து வருகிறது. உலகம் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பா.ஜ.க.வின் எஸ்.சி. கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் நாட்டை விட்டு மறைந்து வருகிறது. உலகம் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழித்துக் கொண்டிருக்கிறது. கேரளாவுக்கு எதிர்காலம் இருந்தால் அது பா.ஜ.க. ஆட்சியின் கீழ்தான்.  பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டுகளும் ஒரு போதும் பாடுபட்டதில்லை. அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே கருதினர் என தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்

முன்னதாக திருவனந்தபுரத்தில்  தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.  இந்த கவுன்சில் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய தெற்கு யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் பங்கேற்றனர்.

பா.ஜ.க.

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில்  மாநிலங்கள் இடையே, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில்  வந்து இறங்கிய அமித் ஷாவை, விமான நிலையத்துக்கு வெளியே பா.ஜ.க. தொண்டர்கள் கடும் மழைக்கு நடுவே வரவேற்றனர். பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஜெய் பா.ஜ.க. என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.