அரசியலில் எதையும் சகித்துக் கொள்ளலாம் ஆனால் துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது... தாக்கரேவை தாக்கிய அமித் ஷா

 
காடுகள் மற்றும்  வனவிலங்குகள் பிரியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே தரும் ஒரு  மகிழ்ச்சியான செய்தி!

அரசியலில் எதையும் சகித்துக் கொள்ளலாம் ஆனால் துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரவை அமித் ஷா மறைமுகமாக தாக்கினார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று மும்பையில் பா.ஜ.க. தலைவர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அப்போது முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை அமித் ஷா கடுமையாக விமர்சனம் செய்ததாக தகவல். அந்த கூட்டத்தில் அமித் ஷா பேசியதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அரசியலில் எதையும் சகித்துக் கொள்ளலாம் ஆனால் துரோகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. சிவ சேனா கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கும், அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்தான் (உத்தவ் தாக்கரே) காரணம். 

அமித் ஷா

கட்சியின் ஒரு பகுதியினர் (ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்)  அவருக்கு எதிராக திரும்பியற்கு அவரது பேராசைதான் காரணம். உத்தவ் தாக்கரே பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல், சித்தாந்தத்திற்கு துரோகம் செய்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா மக்களின் ஆணையையும் அவமதித்துள்ளார். உத்தவ் தாக்கரேவின் அதிகார ஆசையால் அவரது கட்சி இன்று சுருங்கி விட்டது.  

மோடி

உத்தவ் தாக்கரேவுக்கு நாங்கள் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை என்பதை இன்று நான் மீண்டும் கூற விரும்புகிறேன். நாங்கள் திறந்த வெளியில் அரசியல் செய்பவர்கள், மூடிய அறைகளில் அல்ல. அரசியலில் ஏமாற்றுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்கீழ், பிரஹன் மும்பை மாநகராட்சி தேர்தலில் 150 இடங்களை வெல்வதே பா.ஜ.க. மற்றும் உண்மையான சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவு) கூட்டணியின் இலக்காக இருக்க வேண்டும். பொதுமக்கள் மோடி ஜி தலைமையிலான பா.ஜ.க.வுடன் உள்ளனர். சித்தாந்தத்திற்கு துரோகம் செய்யும் உத்தவ் தாக்கரே கட்சியுடன் அல்ல. இவ்வாறு  தெரிவித்தன.