ராகுல் காந்தி ஏன் கோயிலுக்கு செல்கிறார் என்பதை ஏ.கே.அந்தோணியின் பேச்சு விளக்குகிறது.. பா.ஜ.க.வின் அமித் மால்வியா

 
தீபத்தை வணங்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி ஏன் கோயிலுக்கு செல்கிறார் என்பதை ஏ.கே.அந்தோணியின் பேச்சு விளக்குகிறது என்று பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா தெரிவித்தார்.

பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களை ஒன்றாக வைத்திருந்தால் மட்டுமே வரும் தேர்தலில் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி கூறியதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. ராகுல் காந்தி ஏன் கோயிலுக்கு செல்கிறார் என்பதை ஏ.கே.அந்தோணியின் பேச்சு விளக்குகிறது என்று பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா தெரிவித்தார்.

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

அமித் மால்வியா டிவிட்டரில், ஏ.கே. அந்தோணி பேசிய வீடியோ ஷேர் செய்து, காங்கிரஸை பொறுத்தவரை இந்தியர்கள் இந்தியர்கள் அல்ல. அவர்கள் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினர், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என பிரிந்துள்ளனர். இங்கு,  மோடி அரசை வீழ்த்த காங்கிரஸூக்கு இந்துக்களின் ஆதரவு தேவை, சிறுபான்மையினரின் ஆதரவு போதாது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்து அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறுகிறார். இது ராகுல் காந்தியின் கோயில் பயணத்தை (ஏன் கோயிலுக்கு செல்கிறார் என்பதை) விளக்குகிறது என பதிவு செய்துள்ளார். அதாவது இந்துக்களின் வாக்குகளை கவருவதற்காக ராகுல் காந்தி கோயிலுக்கு செல்கிறார் என்று அமித் மால்வியா மறைமுகமாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம்… ஏ.கே. அந்தோணி

கேரள காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற நிறுவன தின விழாவில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களை ஒன்றாக வைத்திருந்தால் மட்டுமே வரும் தேர்தலில் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து வீழ்த்த முடியும். காங்கிரஸால் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்க முடியும். மென்மையான இந்து மதம் என்ற பெயரில் கோயிலுக்கு செல்வோரையும், திலகம் அணிவோரையும் ஒதுக்கி வைப்பது ஏற்புடையதல்ல. மோடி மீண்டும் ஆட்சிக்கு வர இது உதவும். அனைத்து மதத்தினரையும் நம்முடன் சேர்க்க வைக்க வேண்டும். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டமே ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.