கட்சி பதவிகளை கலைத்த சந்தேக மம்தா பானர்ஜி... ஆட்சிக்கவிழ்ப்பு பயம் உண்மைதான்.. பா.ஜ.க.

 
கொரோனா தொற்று உறுதியானால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் – மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் தேசிய அலுவலக நிர்வாகிகள் குழுவை மம்தா பானர்ஜி கலைத்ததை குறிப்பிட்டு, ஆட்சிக்கவிழ்ப்பு பயம் உண்மைதான் என்று பா.ஜ.க.வின் அமித் மால்வியா விமர்சனம் தெரிவித்துள்ளார்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில். திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களுக்கும் இடையிலான மோதல் வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸில்  அபிஷேக் பானர்ஜி அணி, மம்தா பானர்ஜி அணி என இரு பிரிவுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அபிஷேக் பானர்ஜி

இந்த சூழ்நிலையில், திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சி மோதலை கொண்டு வரும் நோக்கில், மம்தா பானர்ஜி கட்சியின் தேசிய அலுவலக நிர்வாகிகள் குழுவை கலைத்துவிட்டு, 20 பேர் கொண்ட செயற்குழுவை அமைத்தார். மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. மேலும் ஆட்சிக்கவிழ்ப்பு பயம் உண்மைதான் என்று தெரிவித்துள்ளது.

அமித் மால்வியா

பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், அபிஷேக் பானர்ஜி ஒருவருக்கு ஒரு பதவி என்ற விவகாரத்தில் ராஜினாமா செய்வதாக மிரட்டியதையடுத்து, ஒரு சந்தேக மம்தா பானர்ஜி அனைத்து கட்சி பதவிகளையும் கலைத்து, ஒரு கமிட்டி அமைத்தார். அபிஷேக்குடன் இணைந்தவர்களை ஒரங்கட்டினார். அடுத்து என்ன? அனைத்து அமைச்சர்களையும் நீக்கிவிட்டு தனித்து ஆட்சி நடத்துவதா? ஆட்சிக்கவிழ்ப்பு பயம் உண்மைதான் என்று பதிவு செய்து இருந்தார்.