ஹைதராபாத்தில் 2 மசூதிகள் இடிக்கப்பட்டது போது ஒவைசி ஒரு வார்ததை கூட பேசவில்லை.. பா.ஜ.க.

 
கடைசி நொடி வரை திட்டமிடாத, அரசியலமைப்புக்கு விரோதமான லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது….. மத்திய அரசு மீது அசாதுதீன் ஓவைசி தாக்கு

2020ம் ஆண்டில் தலைமை செயலகம் கட்டுவதற்காக ஹைதராபாததில் 2 மசூதிகள் இடிக்கப்பட்டபோது, அந்நகர எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என பா.ஜ.க.வின் அமித் மால்வியா தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், சிவ லிங்கம் இருப்பது, அந்த வளாகத்தை அளவிடும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து அசாதுதீன் ஓவைசி கூறுகையில், பாபர் மசூதியை முஸ்லிம்கள் ஏற்கனவே இழந்து விட்டார்கள் ஆனால் இன்னொரு மசூதியை இழக்க மாட்டார்கள் என்று ஓவைசி தெரிவித்தார். 

அமித் மால்வியா

இந்த சூழ்நிலையில் அசாதுதீன் ஒவைசி ஒரு வகுப்புவாத வெறியர் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், ஞானவாபி மசூதி விவகாரத்தில் அசாதுதீன் ஓவைசி வகுப்புவாதத்தை தூண்டி வருகிறார். 2020ம் ஆண்டில், ஹைதராபாத்தில் தலைமை செயலகம் கட்டுவதற்காக மஸ்ஜித்-இ-முகம்மது மற்றும் மஸ்ஜித்-இ-ஹாஷ்மி ஆகிய இரண்டு மசூதிகள் இடிக்கப்பட்டன, ஆனால் அந்த நகரத்தின் எம்.பி.யான அசாதுதீன் ஒவைசி  ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கயாமத் வரை அங்கே ஒரு மசூதி இருந்திருக்க வேண்டாமா?

ஞானவாபி மசூதி

ஒவைசி ஒரு வகுப்புவாத வெறியர் மட்டுமல்ல, பாசிச ஊடகங்களால் விதைக்கப்பட்ட பொய்களை பரப்பும் ஒரு நயவஞ்சகர். தன்னிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களிடமிருந்து அசாதுதீன் ஓவைசி அவர் ஓடுகிறார். மோசமான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும், வெறித்தனத்தை தூண்டுவதற்கும் அவரை அனுமதிப்பவர்களிடம் மட்டுமே  ஈடுபடுகிறார். ஞானவாபி  கோயில் விவகாரத்தில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை.