இந்திரா காந்தி தான் முதலில் சிறுபான்மையினருக்கு எதிராக புல்டோசரை பயன்படுத்தினார்.. அமித் மால்வியா பதிலடி

 
இந்திரா காந்தி காலத்தில் புல்டோசர் பயன்படுத்தப்பட்டதற்கு ஆதாரமாக அமித் மால்வியா வெளியிட்ட புகைப்படம்

இந்திரா காந்தி தான் முதலில் சிறுபான்மையினருக்கு எதிராக புல்டோசரை பயன்படுத்தினார் என பா.ஜ.க.வின் அமித் மால்வியா காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்தார்.

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி விமர்சனம் செய்துள்ளார். மணிஷ் திவாரி டிவிட்டரில், நாஜிக்கள் யூதர்களுக்கு எதிராக புல்டோசரை அதிக அளவில் பயன்படுத்தினார்கள். யூதர்கள் அதை பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பயன்படுத்தினர். இந்திய அரசு இப்போது அதை தனது சொந்த சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்துகிறது என பதிவு செய்து இருந்தார்.

இந்திரா காந்தி

மணிஷ் திவாரியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா பதிலடி கொடுத்துள்ளார். அமித் மால்வியா டிவிட்டரில், காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும், மணிஷ் திவாரி முதல் ராகுல் காந்தி வரை, மறதி நோயால் பாதிக்கபடுகிறார்களா அல்லது அவர்கள் தங்கள் (கட்சியின்) கடந்த காலத்தை பற்றி சரியாக தெரியாதவர்களா?. நாஜிக்கள் மற்றும் யூதர்களை மறந்து விடுங்கள், இந்தியாவில் துர்க்மேன் கேட்டில் சிறுபான்மையினர் மீது புல்டோசர்களை பயன்படுத்த முதலில் உத்தரவிட்டவர் இந்திரா காந்தி. 

அமித் மால்வியா

1976 ஏப்ரலில் அவசரநிலையின் போது, முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும் கட்டாய கருத்தடை செய்ய சஞ்சய் காந்தி வற்புறுத்தினார். மேலும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, துர்க்மேன் கேட்டில் புல்டோசர்கள் உருட்டப்பட்டன. 20 பேர் இறந்தனர். நாஜிகளுடனான காங்கிரஸின் காதல் இந்திரா காந்தியிடம் நிறுத்தப்பட வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.