அது மட்டும் நடக்கலேன்னா சிறைதான்! எடப்பாடியை எச்சரித்த அமித்ஷா

 
அ

அமித்ஷா சொன்ன அந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி .

அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  அப்போது முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும், சி.வி. சண்முகமும் உடனிருந்தனர்.  இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி,  அமித்ஷாவுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.  ஆனால்  அமித்ஷாவுடனான சந்திப்பில் 90 சதவிகிதம் அரசியல்தான் பேசப்பட்டது என்கிற தகவல் கசிந்துள்ளது. 

எ

 2024 ஆம் ஆண்டில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்  குறித்து தான் இந்த சந்திப்பில் அதிகம் பேசப்பட்டு இருக்கிறது.   ‘’2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வென்று விட்டால் தமிழகத்தில் நீங்கள் அரசியலே செய்ய முடியாது’’ என்று எச்சரித்திருக்கிறார் அமித்ஷா. 

 எடுத்த எடுப்பிலேயே அமித்ஷா எப்படி எச்சரிக்கை குண்டை வீசியதால் அதிர்ந்து போயிருந்த எடப்பாடியிடம்,   ’’குறைந்தது 25 இடங்களிலாவது நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிடுங்கள்.   அது மட்டும் போதாது,   ஏற்கனவே தினகரன் அதிமுகவின் ஓட்டுகளை பிரித்துக் கொண்டிருக்கிறார் . இனியும் பிரிந்தால் வீழ்வீர்கள்; இதுதான் நிச்சயம்’’ என்று மீண்டும் எச்சரித்திருக்கிறார்.  

’’ அதனால்,  அனைவரையும் அரவணைத்து அதிமுக பிளவு படாமல் தடுத்து பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளையும் அரவணைத்து, ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியாக அமைப்பதற்காக இப்போதில் இருந்தே என்ன செய்யலாம் என திட்டமிடுங்கள்’’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்.   ’’திமுக அதிக இடங்களை வென்று விட்டால் நீங்கள் அரசியலே செய்ய முடியாது என்பது  ஒரு புறம் இருக்கட்டும்,  அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வரும்’’ என்றும் மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். 

’’ உங்களுக்குள் அடித்துக் கொள்ளாமல் திமுகவை தோற்கடிப்பதற்கான வேலையை செய்யுங்கள்’’ என்று மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறார் அமித்ஷா.