ஊழல் நிறைந்த ஹேமந்த் சோரன் அரசு தலித்-பழங்குடியின சகோதரிகளை பாதுகாக்காமல் வாக்கு வங்கியை பாதுகாக்கிறது.. அமித் ஷா

 
அமித் ஷா

ஜார்க்கண்டில் ஊழல் நிறைந்த ஹேமந்த் சோரன் அரசு தலித்-பழங்குடியின சகோதரிகளை பாதுகாக்காமல் வாக்கு வங்கியை பாதுகாக்கிறது என்று  அமித் ஷா குற்றம் சாட்டினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கடுமையாக விமர்சனம் செய்தார். அமித் ஷா கூறியதாவது: அரசு மண்டியிடும் ஊழலில் உள்ளது. ஹேமந்த் சோரன் மாநிலத்தை சீரழித்து விட்டார். சோரன் ஒரு பழங்குடியினராக இருந்தாலும், பழங்குடியின சமூகத்தின் நலன்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. ஹேமந்த் சோரன் அம்பலப்பட்டு விட்டார். பழங்குடியினர் அவரை மன்னிக்க மாட்டார்கள். பழங்குடியின சமூகத்தின் நலன்களை பாதுகாக்க பா.ஜ.க. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் ஊழல் நிறைந்த ஹேமந்த் சோரன் அரசு தலித்-பழங்குடியின சகோதரிகளை பாதுகாக்காமல் வாக்கு வங்கியை பாதுகாக்கிறது. 

பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு… பா.ஜ.க. எம்.பி.யிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு ஹேமந்த் சோரன் வழக்கு

2014ம் ஆண்டுக்கு முன்பு நக்சல் அச்சுறுத்தல் அரசுக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருந்தது. காங்கிரஸ்  காலத்தில் இடதுசாரி தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது. மோடிஜி பிரதமரான பிறகு, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திட்டமிட்ட முறையில், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் கொள்கையை கடுமையாக அமல்படுத்தினார். இதன் விளைவாக இன்று இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. ஆபரேஷன் ஆக்டோபஸ் மற்றும் பிற நக்சல் எதிர்பபு இயக்கங்கள் மூலம் புத்த பஹாத் மற்றும் பிற தொலைதூர பகுதிகள் மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. 

பா.ஜ.க.வின் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இடம் இல்லை…. மெகபூபா முப்தி ஆவேசம்..

மத்திய அரசு தனது கருவூலத்தை டி.எம்.டி. நிதியில் முழுமையாக திறந்தது. ஆனால் டி.எம்.டி. நிதிக்கான விதிமுறைகளை மாற்றியது. பா.ஜ.க. மாநிலத்திற்கு நிறைய செய்துள்ளது. ஆனால் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொள்ளையடித்துள்ளார். ஜார்க்கண்டில் தாமரை மீண்டும் மலரும். 2019 தேர்தலின்போது, சாய்பாசா மற்றும் ராஜ்மஹால் தொகுதிகளில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. 2024 தேர்தலில் சாய்பாசாவில் பா.ஜ.க. வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இடதுசாரி தீவிரவாதம் முடிவடையும் தருவாயில் உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன், முழு நாட்டையும் இடதுசாரி தீவிரவாத்திலிருந்து விடுவிப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.