மாநிலத்தின் அடுத்த முதல்வருடன் வந்துள்ளேன்.. பூபேந்திர படேல் தான் முதல்வர்.. நம்பிக்கையுடன் தெரிவித்த அமித் ஷா
அகமதாபாத் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தின் அடுத்த முதல்வர் பூபேந்திர படேல் தான் என்பதை, மாநிலத்தின் அடுத்த முதல்வருடன் மாநிலத்துக்கு வந்துள்ளேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித் ஷா, மாநில முதல்வர் பூபேந்திர படேலுடன் கலந்து கொண்டார். அந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், குஜராத்தின் அடுத்த முதல்வருடன் நான் மாநிலத்துக்கு வந்துள்ளேன் என்று குஜராத்தின் அடுத்த முதல்வர் பூபேந்திர படேல் தான் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அமித் ஷா நேற்று முன்தினம் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இதே குஜராத்தான் 1985 முதல் 1995 வரை பல வகுப்புவாத கலவரங்களை கண்டது. இப்போது ஊரடங்கு உத்தரவு பற்றி சிறு குழந்தையிடம் கேட்டால் கூட, அந்த குழந்தைக்கு அதன் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். காங்கிரஸ் புதிய ஆடை அணிந்து வந்திருக்கிறது. குஜராத் முழுவதும் காங்கிரஸ் வேலை பேசுகிறது என்ற போஸ்டர்களை பார்த்தேன். 1990ல் இருந்து அவர்கள் ஆட்சி செய்யவில்லை என்றால், அவர்களின் வேலை எப்படி பேசுகிறது? என்று தெரிவித்தார்.
குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 2 கட்டங்களாக (டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி) நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.