யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுவில் சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஏன் கையெழுத்திடவில்லை?.. பா.ஜ.க...

 
அமித் மால்வியா

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுவில் சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஏன் கையெழுத்திடவில்லை? என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.


குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். 

யஷ்வந்த் சின்ஹா

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா கடந்த திங்கட்கிழமையன்று குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சரத் பவார், அகிலேஷ் யாதவ் மற்றும் பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுவில் சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஏன் கையெழுத்திடவில்லை? என்றும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

சிவ சேனா

பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், சிவ சேனா அல்லது தேசியவாத காங்கிரஸில் இருந்து யாரும் முன்மொழிபவராக அல்லது இரண்டாவதாக யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்பது சுவாரஸ்யமானது. எதிர்க்கட்சி ஒற்றுமை மற்றும் ஒருமித்த வேட்பாளருக்கு இவ்வளவு அல்லது ஒருவேளை அவர்கள் மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் இருப்பை ஊகிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார்களா? என பதிவு செய்து இருந்தார்.