அசோக் கெலாட்டின் கலகம் சோனியா காந்தியின் அரசியல் அந்தஸ்தை வெகுவாகக் குறைத்து விட்டது.. அமித் மால்வியா

 
சோனியா காந்தி

அசோக் கெலாட்டின் கலகம் சோனியா காந்தியின் அரசியல் அந்தஸ்தை வெகுவாகக் குறைத்து விட்டது என்று பா.ஜ.க.வின் அமித் மால்வியா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், சசி தரூர், அசோக் கெலாட், முகுல் வாஸ்னிக், திக்விஜய சிங் மற்றும் கமல் நாத் போன்ற அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தேர்தலில் அசோக் கெலாட் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் நிலவுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் ராஜஸ்தான் காங்கிரஸில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. ஆனால் அசோக் கெலாட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் இதனை விரும்பவில்லை. சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை கொடுத்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் என்று ராஜினாமா கடிதத்தையும் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்து விட்டனர். இதற்கு தனக்கும் சம்பந்தம் இல்லை என்று காங்கிரஸ் தலைமையிடம் அசோக் கெலாட் தெரிவித்தாலும், காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தியில் உள்ளது. 

அமித் மால்வியா

இந்நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறிப்பிட்டு காந்தி குடும்பத்தை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் வேட்புமனு தாக்கல் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அவரது கலகம் சோனியா காந்தியின் அரசியல் அந்தஸ்தை வெகுவாகக் குறைத்து விட்டது. இப்போது, கட்சி தலைவராக யார் வந்தாலும், பலவீனமான காந்தி குடும்பத்துக்கு எதிராக மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படலாம். காந்தி குடும்பத்தின் வெல்லமுடியாத ஒளி இப்போது சரிந்து விட்டத என தெரிவித்தார்.