வெளிநாட்டு ஊடகங்களில் பெகாசஸ் அறிக்கை எப்படி வந்தது என்பதை ராகுல் காந்தி விளக்குவாரா?.. அமித் மால்வியா

 
பெகாசஸ் சாப்ட்வேர் விவகாரம்

நாடாளுமன்றத்தின் முக்கியமான அமர்வு தொடங்குவதற்கு சற்று முன்பு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் இந்திய போர்ட்டலில் பெகாசஸ் அறிக்கைகள் எவ்வாறு வந்தன என்பதை ராகுல் காந்தி விளக்குவாரா? என்று அமித் மால்வியா கேட்டார்.


இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. அமைப்பின் பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மேலும் மத்திய அரசு முக்கிய தலைவர்களின் பேச்சை ஒட்டு கேட்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்தது. பெகாசஸ் தகவல் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் வெளியே வந்தது. 

ராகுல் காந்தி

இதனையடுத்து உச்ச நீதிமன்றம் பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் ஒரு குழுவை நியமனம் செய்தது. அந்த குழு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில், தான் ஆய்வு செய்த 29 மொபைல் போன்களில் ஸ்பைவேர் கண்டுபிடிக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த குழு, பெகாசஸ் உளவுசாப்ட்வேருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்ததை குறிப்பிட்டு, ராகுல் காந்தியை பா.ஜ.க.வை தாக்கியுள்ளது. 

பா.ஜ.க. ஏன் தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்… காந்தி குடும்பத்தை கிண்டலடித்த மால்வியா

இது தொடர்பாக பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், இப்போது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு பெகாசஸ் பற்றி எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. இந்த பிரச்சாரத்தை ஊக்குவித்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் முக்கியமான அமர்வு தொடங்குவதற்கு சற்று முன்பு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் இந்திய போர்ட்டலில் இந்த அறிக்கைகள் எவ்வாறு வந்தன என்பதை விளக்குவாரா? எந்த அமைப்பின் நலனுக்காக அவர் (ராகுல் காந்தி) பணியாற்றினார்.