சிபிஐக்கு அனுமதியா? விஜயபாஸ்கர் சிக்குகிறாரா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு

 
ர

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா  மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருக்கும் நிலையில்,  சிபிஐ அனுமதி கேட்டால் தமிழக அரசு அனுமதி கொடுத்துதான் ஆகவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

கடந்த 2016 ஆம் ஆண்டில் சென்னையில் செங்குன்றம் அருகே இருந்த குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள் . அந்த சோதனையில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.   அந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும் டைரிகளும் சிக்கின. அது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டில் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது . 

வி

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  முன்னாள் அமைச்சர் ரமணா ,  ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் ஜார்ஜ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் 246 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் நடக்கப்பட்ட ன.  மூன்று அதிகாரிகள் உட்பட ஆறு பேர் மீது சிபிஐ இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

 இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் ரமணா , ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் டி.  ராஜேந்திரன் ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி இருக்கிறது.  

இது குறித்து திமுக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ,   குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ அனுமதி கோரினால் தமிழக அரசு அனுமதி தந்து தான் ஆக வேண்டும். இது குறித்து  முதல்வரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.   அவர் மேலும் ,  முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொன்னார்கள்.   ஆனால் வருமானவரித்துறை சோதனை நடத்தி இருப்பதன் மூலம் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடவில்லை என்பது  நிரூபணம் ஆகி இருக்கிறது என்கிறார்.