திமுகவுடன் கூட்டணியா? என்ன சொன்னார் மோடி?
நேற்று நடந்த 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவின் மேடையில் பிரதமரும் முதல்வரும் ரொம்பவும் அன்னியோன்யமாக இருந்தது கண்டு கூட்டணி மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? திமுக- பாஜக கூட்டணி உருவாகிறதா? என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்துகின்ற மாதிரி அண்ணாமலையும் முதல்வர் மு. க. ஸ்டாலினை அதிகம் புகழ்ந்து பேசி இருக்கிறார்.
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி 30 நிமிடங்கள் ஓய்வுக்கு பின்னர் தன்னை பார்க்க வந்தவர்களை சந்தித்தார். தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அவர் 40 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தி இருக்கிறார் .
ஆலோசனைகள் முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு வெளியே வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம், திமுக பாஜக கூட்டணி உருவாகிறதா? என்ற கேள்விக்கு, முன்பு பிரதமர் வந்த போது மு .க. ஸ்டாலின் கட்சி தலைவராக நடந்து கொண்டாரே தவிர முதல்வராக நடந்து கொள்ள வில்லை. அதனால் அவரிடம் அப்போது இன்னும் கொஞ்சம் பெரிய மனதோடு பேசி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் . இந்த முறை முதல்வர் ஸ்டாலின் முதல்வர் போல நடந்து கொண்டார் அதனால் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறோம்.
அதற்காக திமுகவுடன் பாஜக கூட்டணி என்று சொல்வதா? பாஜக எப்பொழுதுமே கொள்கை ரீதியாக செல்லும் கட்சி. கொள்கை ஒருபோதும் பாஜக மாற்றிக் கொள்ளாது என்று சொன்னவர், பிரதமருக்கு தெரியாத அரசியல் இல்லை. இது தேர்தல் நேரம் இல்லை. அதனால் அவர் அரசியல் பேசவில்லை. நேரம் வரும்போது அரசியல் பேசுவோம் என்றார்.
முதல்வர் போல் அல்லாமல் கட்சித் தலைவர் போல் நடந்து கொண்டதால் விமர்சித்து இந்த முறை முதல்வர் போல் நடந்து கொண்டதால் பாராட்டுகிறேன் எப்போதும் ஆளும் கட்சி விமர்சித்துக் கொண்டே இருக்க வேண்டிய தேவை இல்லை பொதுவாகவே இப்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.