கூட்டணி உறுதி! ஒரே மேடையில் ராகுல்,ஸ்டாலினுடன் கமல்

 
c

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.  

st

 கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முதல்வர் ஸ்டாலின் விரும்பி இருந்தார் என்ற தகவல் பரவியது.  இதற்காக உதயநிதி ஸ்டாலினும் கமல்ஹாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.   ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வரவில்லை என்ற தகவல் பரவியது.

 அதன் பின்னர் திரைப்பட விநியோகத்தில் மூலமாக உதயநிதி ஸ்டாலின் உடன் கைகோர்த்தார் கமல்ஹாசன்.  அப்போது உதயநிதி ஸ்டாலின் ஏற்பட்ட பழக்கத்தினால்   அரசியல் கூட்டணி வைக்கவும் முடிவு செய்து இருக்கிறார் கமல் என்ற தகவல் பரவி வந்தன.  அதை உறுதி செய்யும் விதமாக , அதற்கு முன்னோட்டமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார். 

ka

அதன் பின்னர் ராகுல் காந்தியுடன் சந்தித்து உரையாடி அதை வீடியோவாகவும் வெளியிடப்பட்டது.   அப்போது திமுக -காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் வந்துவிட்டார் என்ற பேச்சு எழுந்தது.  அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் உடன் அமர இருக்கிறார் கமல்ஹாசன்.

 மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.   பிப்ரவரி மூணாவது வாரத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்திருக்கிறது மக்கள் நீதி மய்யம்.  பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ்  மாநாடு முடிந்ததும் தமிழகம் வந்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதாக சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி .

அதே நேரம் அந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கு தமிழக முதல்வர்  ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுங்கள் என்று மக்கள் நீதி மய்யத்திருக்கு சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி. இதன் மூலம் ஒரே மேடையில் ராகுல் காந்தி, ஸ்டாலின் உடன் கமல்ஹாசனும் ஆஜராக இருக்கிறார்.

 வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைகிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.