இந்த விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் முதல்வருக்கு ஒத்துழைப்பு!
மாநில அரசு விதிக்கக்கூடிய வரியால் மட்டுமே விலைவாசி உயர்வு இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் பிரதமர். இந்த பிரச்சாரத்தை பாஜக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார சரிவால் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றிருக்கிறது .பிரதமர் இதற்கு உடனடியாக அனுமதி வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும், தமிழக முதல்வரின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டுதலுக்குரியது. அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விவகாரத்தில் முதல்வருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொண்டிருக்கிறது. விசிக சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார் .
மேலும் எழுவர் விடுதலை தொடர்பான கேள்விக்கும்,நீட் தொடர்பான கேள்விக்கும், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் அவர்களது டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும்தான் இந்த பதிவுக்கு காரணம். மாநில அரசு விதிக்கக் கூடிய வரியால் மட்டுமே இந்த அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது போன்ற தோற்றத்தை பிரதமர் ஏற்படுத்துகிறார். இந்த பிரச்சாரத்தை பாஜக கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.