அலெக்சாண்டரும் இபிஎஸ் பக்கம் தாவினார்! தீர்மானமும் நிறைவேற்றினார்

ஓபிஎஸ் அணியிலிருந்த ஆதரவாளர்களில் ஒவ்வொருவராக எடப்பாடி பக்கம் சாய்ந்து வருகிறார்கள். நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவும், விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரனும் எடப்பாடி பக்கம் போய்விட்ட நிலையில், அலெக்சாண்டரு, எடப்பாடி பக்கம் போயிருக்கிறார் . அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என்று தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறார்.
அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான வி. அலெக்சாண்டர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று அம்பத்தூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்தது. அப்போது கட்சியின் ஒற்றை தலைமையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கழக பொதுச் செயலாளராக வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் இப்படி அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இரு அணிகளாக இருக்கும் இபிஎஸ்- ஒபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அலெக்சாண்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமை வேண்டும். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமானமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத்தலைமை வேண்டும். அவரை பொதுச்செயலாளராகவும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலெக்சாண்டர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடிபழனிச்சாமியை நேரிலும் சந்தித்து ஆதரவை சொல்லி இருக்கிறார்கள்.