அதிமுக மோடியின் மறு உருவமாக மாரி வருகிறது- கே.எஸ். அழகிரி

 
ks alagiri

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தத்தை, மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்து எங்கள் கூட்டணி பயணிக்கிறது.
அதிமுகவால் இந்த கொள்கையை எப்போதும் ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும் இயக்கப்போவது மோடி அமித்ஷா தான்.அதிமுக தற்போது பாஜக மோடியின் மறு உருவமாக உள்ளது.

அதிமுக வேறு  இயக்கத்தில் நடித்து தான் வருகிறது. அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அதிமுக பெற முடியாது, என்றார்.மேலும், காசி தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வில் மோடி பங்கேற்றிருந்தாலும்  பாஜக அதனை உரிமை கொண்டாட முடியாது . தமிழ்நாடு அறநிலையத்துறை செலவு செய்து 200 பேரை  காசிக்கு அனுப்பியுள்ளது.
 

நியாயமாக தமிழ்நாடு அறிநிலையத்துறைக்கு தான் பெருமை சேரும். பாஜக இதில் உரிமைக் கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவது போல் ஆகும், என்றார். 
ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்வதால் மக்களிடம் உள்ள வரவேற்பைப் பார்த்து பலர் அச்சத்தில் மிரண்டுபோய் உள்ளனர் எனவும், அவரை தடுத்து நிறுத்தவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.