அழகிரி -உதயநிதி சந்திப்பும் ரவுடிகள் தொல்லையும் -விளாசும் செல்லூர்ராஜூ

 
se

தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் உதயநிதியும் மு.க . அழகிரியும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.  இதனால் என்ன மதுரையில் பாலாறும் தேனாறுமா ஓட போகிறது ? மதுரையில் ஏற்கனவே ரவுடிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது.  இதில் இது வேறு என்னவாக போகிறதோ என்று கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜ்.

al

 மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில்  கோரிப்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் முழு உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  பின்னர்  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  

 மதுரையில் நடந்த மு.க. அழகிரி -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,    அழகிரி உதயநிதி சந்திப்பு மூலம் மதுரையில் என்ன பாலாறும் தேனாறுமா ஓடப் போகிறது? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துக்காட்டு இது என்றார்.   தொடர்ந்து அது குறித்து பேசிய செல்லூர் ராஜு,  மதுரையில் ஏற்கனவே ரவுடிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது.  இதில் அழகிரி சந்திப்பு மூலம் என்னவாக போகின்றதோ ஒன்றுமே தெரியவில்லை என்றார்.

 விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார் .  ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல எல்லா இடங்களிலும் அவர் சிறப்பாக செயல்படுவதாக கூறி வருகின்றார்.  ஸ்டாலின்.  

 கருணாநிதியை கலைஞர் என்று ஏன் குறிப்பிடுகின்றோம்.   அவர் நடிக்க கூடியவர்.  அவர்கள் குடும்பமே நடிப்பவர்கள் தான்.  அதனால்தான் எதிர்பார்த்த மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என்றார்.