அழகிரி ஆப்சென்ட் -ஸ்டாலின் அப்செட்

 
அச்

முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரிக்கு அறுவை சிகிச்சை நடந்து ஓய்வு எடுத்து வருகிறார்.  அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டிருக்கிறார்.   ஆனால் சிலரின் முகசுளிப்பால் சந்திப்பை தள்ளி போட்டு இருக்கிறார் என்று தகவல்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி  மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவு நாள்.   அன்று நினைவு நாளில் சென்னை வந்து கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவது அழகிரியின் வழக்கம்.   ஆனால் இந்த முறை அழகிரி,  கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தவில்லை.   அவர் ஏன் வரவில்லை என்பது குறித்து கட்சியினர் என இடையே மட்டும் அல்லாது கட்சிக்கு வெளியேயும் கேள்வி எழுந்தது.

அக்

 இது குறித்து அழகிரி தரப்பில் இருந்து சில தகவல்கள் கசிகின்றன.   அழகிரிக்கு காலில் ஏற்பட்டிருந்த காயத்தின் காரணமாக சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.   அறுவை சிகிச்சைக்கு பின் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.   இதை அடுத்து அழகிரி ஓய்வு பெற்று வருகிறார் .

இந்த நிலையில் தனது தந்தை நினைவு தினம் வந்ததால் அவரால் சென்னை வர முடியவில்லை.  இதை அறிந்த அவரது சகோதரரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அழகிரியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க விருப்பப்பட்டிருக்கிறார்.   ஆனால் முதல்வருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் சிலர் இதை விரும்பாமல் இருந்திருக்கிறார்கள்.  அதனால் தற்போதைக்கு சகோதரரின் சந்திப்பை தள்ளிப் போட்டு இருக்கிறார்.  

அழ்

அதே நேரம், சகோதரரை நேரில் சந்திக்க முடியவில்லையே என்கிற அப்செட்டில் இருந்த  ஸ்டாலின்,   தனது சார்பில் குடும்ப உறுப்பினர் ஒருவரை அனுப்பி அழகிரி இடம் நேரில் சென்று நலம் விசாரித்து வரச் செய்திருக்கிறார். 

 அடுத்த முறை அரசு நிகழ்ச்சிக்காக மதுரை செல்லும் போது அழகிரி வீட்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் சகோதரரிடம் நலம் விசாரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறது மதுரை திமுக வட்டாரம்.