விரைவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளும் மக்களும் பா.ஜ.க.வுக்கு எதிராக நிற்பார்கள்.. அகிலேஷ் யாதவ்

 
அகிலேஷ் யாதவ்

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியதை குறிப்பிட்டு, விரைவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளும் மக்களும் பா.ஜ.க.வுக்கு எதிராக நிற்பார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினார். இதனையடுத்து அம்மாநில கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் மெகா கூட்டணியில் இணைந்து சுமார் 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னரிடம் கோரினார். இதனால் பீகாரில்  நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணியின் புதிய அரசாங்கம் அமைய உள்ளது. 

பா.ஜ.க.

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியதை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், இந்த நாளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற கோஷம் கொடுக்கப்பட்டது. இன்று பீகாரில் இருந்து பா.ஜ.க. விரட்டு கோஷம் வருகிறது. விரைவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளும் மக்களும் பா.ஜ.க.வுக்கு எதிராக நிற்பார்கள் என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.

டி.ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா டிவிட்டரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டது என்பது பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலின் வலுவான குற்றச்சாட்டாகும். பா.ஜ.கவின் ஏதேச்சதிகாரம் ஒத்துழைக்க வாய்ப்பில்லை. இதற்கு அகாலிதளம், சிவ சேனாவுக்கு (உத்தவ் தாக்கரே பிரிவு) பிறவு ஐக்கிய ஜனதா தளம் சமீபத்திய உதாரணம். பா.ஜ.க. மற்றும் அதிமுக உறவிலும் விரிசல் தெரிகிறது என பதிவு  செய்து இருந்தார்.