உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும்... அகிலேஷ் யாதவ் உறுதி

 
பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற  தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற  தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும். பல தசாப்தங்களாக ஆட்சி செய்வதாக கூறிக்கொண்ட கட்சி, அடுத்த 50 ஆண்டுகள் இருக்கும் என்று அதன் தலைவர் சொன்னது, இப்போது அதன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. 

பா.ஜ.க.

அதன் (பா.ஜ.க.) தேசிய தலைவர் மாநிலத்தில் உள்ள இரண்டு மருத்துவ கல்லூரிகளை பார்வையிட வேண்டும் அதன் பிறகு அவர்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்பது அவருக்கு புரியும். பா.ஜ.க. பாரபட்சத்தை கடைப்பிடிக்கிறது. கான்பூரில் டிசம்பர் 12-13ம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் கான்பூரில் போலீஸ் காவலில் இறந்த பல்வந்த் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்க தீர்மானம் நிறைவேற்றுமா?. ரூ.1 கோடி நிதி உதவியும், காவல் மரண வழக்குகளில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலையும் வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பணம்

லண்டன் மற்றும் நியுயார்க்கில் இருந்து முதலீடுகளை கொண்டு வருவதாக அவர்கள் (யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில பா.ஜ.க. அரசு)  கூறி வந்தனர். இப்போது மாவட்டங்களில் இருந்து முதலீட்டை கொண்டு வருகிறார்கள். யாரை ஏமாற்றுகிறார்கள்?. அவர்கள் ஏற்கனவே தங்கள் சொந்த (முதலீட்டு) திட்டங்களை நடத்தி வரும் (பிற) மாநிலங்களுக்கு முதலீடுகளுக்காக செல்கிறார்கள். அவர்கள் மக்களை முட்டாளாக்குகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.