டிவிட்டரில் உ.பி துணை முதல்வரை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

 
அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியை வம்புக்கு இழுத்து வாங்கி கட்டிக் கொண்டார்.

சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிரித்தப்படி இருக்கும் படத்தை பதிவேற்றம் செய்து, நீங்கள் மிகவும் சிரிக்கிறீர்கள். உங்கள் அமைச்சகத்தில் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளது. உங்கள் அமைச்சகத்தின் துறைகளுக்கு பணம் வரவில்லை. டெண்டரை செய்ய முடியவில்லை. இந்த ரகசியங்களையெல்லாம் மறைக்கிறீர்களா?. ஏன் இவ்வளவு சிரிக்கிறீர்கள் என பதிவு செய்து இருந்தார்.

கேசவ் பிரசாத் மவுரியா

அகிலேஷ் யாதவின் டிவிட்டுக்கு கேசவ் பிரசாத் மவுரியா உடனடியாக பதிலடி கொடுத்தார். கேசவ் பிரசாத் மவுரியா டிவிட்டரில், 2024 மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியால் தனது கணக்கை திறக்க ( ஒரு இடத்தில் கூட வெற்றி பெற) முடியாது,  அவர்கள் அதிகாரத்திற்காக அமைதியற்றவர்களாக இருந்தாலும் கூட. உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மோடி அலை முன்பை விட வேகமாக வருகிறது என பதிவு செய்து இருந்தார்.

சமாஜ்வாடி

அகிலேஷ் யாதவ் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பேசுகையில்,  100 எம்.எல்.ஏ.க்களுடன் சமாஜ்வாடி கட்சியில்  கேசவ் பிரசாத் மவுரியா இணைந்தால் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என தெரிவித்தார். இதற்கு கேசவ் பிரசாத் மவுரியா,  சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் 100 பேர் பா.ஜ.க.வில் சேர தயாராக உள்ளனர். அகிலேஷ் யாதவ் அதிகாரம் இல்லாமல் விரக்தியில் இருக்கிறார் என பதிலடி கொடுத்தார்.