எங்க கூட்டணிக்குதான் தபால் வாக்கு அதிகம்.. அகிலேஷ் யாதவ் தகவல்

 
தபால் வாக்கு

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் எங்க கூட்டணிக்குதான் தபால் வாக்கு அதிகம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. கட்சி 255 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி தக்கவைத்து கொண்டது. அந்த தேர்தலில் பா.ஜ.க. 41.29 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 111 தொகுதிகளை கைப்பற்றியதுடன், 32.06 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது 

சமாஜ்வாடி

உத்தர பிரதேச தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சி பிடித்து விடுவோம் என்ற உறுதியாக இருந்த அகிலேஷ் யாதவுக்கு தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்கில் எங்க கூட்டணிதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்றும், அதன்படி நாங்கள் 304 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், உத்தர பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணி 51.5 சதவீத தபால் வாக்குகளை பெற்றுள்ளது. அதன்படி பார்த்தால் எங்கள் கூட்டணி 304 இடங்களை கைப்பற்றியிருக்கும். எங்களுக்கு வாக்களித்த அனைத்து பாதுகாப்பு பணியாளர்கள், அரசு ஆசிரியர்கள் மற்றும் பிற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அரசாங்கத்தில் உள்ளவர்கள் நினைவில் கொள்ளுங்கள், ஏமாற்றுவதன் மூலம் நீங்கள் பலம் பெற மாட்டீர்கள் என்று பதிவு செய்து உள்ளார்.