ஒருவரின் வயிறு காலியாக இருக்கும்போது மலிவான இன்டர்நெட் என்ன செய்யும்.. மோடியை தாக்கிய அகிலேஷ் யாதவ்

 
அகிலேஷ் யாதவ்

ஒருவரின் வயிறு காலியாக இருக்கும்போது மலிவான இன்டர்நெட் என்ன செய்யும் என பிரதமர் மோடியை அகிலேஷ் யாதவ் தாக்கினர்.

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனின் தலைநகர் பெர்லினில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது மோடி பேசுகையில், இந்தியாவில் இருக்கும் இணைய வேகம், அது எவ்வளவு மலிவானது என்பது பெரும்பாலான நாடுகளால் நினைத்து பார்க்க முடியாதது என தெரிவித்து இருந்தார்.

மோடி

பிரதமர் மோடியின் இந்த பேச்சை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக 
சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முத அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், பிரதமர் மோடியின் உரையின் 42 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பை பதிவேற்றம் செய்து இருந்தார்.  பணக்காரர்களை பாராட்டுவதும், ஏழைகள் உங்களுக்கு சேவை செய்வதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.

இந்தியாவுக்கு இன்டர்நெட் வந்து 25 வருஷம் ஆயிட்டு…. இன்டர்நெட் இணைப்பில் தமிழகம் 3வது இடம்

 ஒருவரின் வயிறு காலியாக இருக்கும்போது மலிவான இன்டர்நெட் என்ன செய்யும்.  ஒருவருக்கு குறைந்த விலையில், பெட்ரோல், டீசல், கியாஸ், பருப்பு அரிசி, எண்ணெய், நெய் மற்றும் மாவு தேவை. ஏனெனில் தரவு மட்டுமே வயிற்றை நிரப்பாது என பதிவு செய்து இருந்தார் என பதிவு செய்து இருந்தார்.