பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு இந்தியர்களை வெளியேற்ற தவறி விட்டது... அகிலேஷ் யாதவ்

 
பா.ஜ.க.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற  தவறி விட்டது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இந்திய குடிமக்கள், இந்திய மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். உக்ரைனில் பரிதவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், மத்திய அரசின் மீட்பு நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

உக்ரைனில் இந்திய மாணவர்கள்

இந்த சூழ்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் ஆப்ரேஷன் கங்கா பெயர் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது: எந்த சர்வதேச அங்கீகாரத்தை பற்றி அவர்கள் பெருமை கொள்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் (பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு) இந்தியர்களை வெளியேற்ற  தவறி விட்டனர்.

அகிலேஷ் யாதவ்

மேலும், வாரணாசியிலும் (அங்கே) தேர்தல்கள் இருப்பதால், வெளியேற்ற நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் கங்கா என்று பெயரிட்டனர். அவர்கள் உக்ரைனிலிருந்து மக்களை நேரடியாக காப்பாற்றினார்களா? அப்படி என்றால் நான் அதை பாராட்டியிருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.