எந்த வேலையும் நடக்காமல், முழு பணமும் கொட்டப்பட்டுள்ளது.. யோகி அரசு மீது ஊழல் குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ்

 
உத்தர பிரதேச அமைச்சர் சுவந்திர தேவ் சிங்

எந்த வேலையும் நடக்காமல், முழு பணமும் கொட்டப்பட்டுள்ளது என உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீது அகிலேஷ் யாதவ் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில ஜல் சக்தி துணை அமைச்சர் சுவந்திர தேவ் சிங் கடந்த சனிக்கிழமையன்று ஜான்சி சென்று கால்வாய் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் சுதந்திர தேவ் சிங் டிவிட்டரில், இன்று ஜான்சி மாவட்டத்தில் உள்ள பத்வார் ஏரியை குர்சாய் கால்வாயுடன் நிரப்ப ஊட்டி கால்வாய் அமைக்கும் திட்டத்தை ஆய்வு  செய்தேன். மழைக்காலம் வருவதற்குள் இப்பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என பதிவு செய்து இருந்தார்.

அதிகாரிகளுடன் பேசும் சுவந்திர தேவ் சிங்

சுவந்திர தேவ் சிங் கால்வாய் கட்டுமான பணிகளை  ஆய்வு செய்தபோது, கால்வாய் மோசமாக இருப்பதை கண்டு அதிகாரிகளை கண்டித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பணம் சம்பாதிப்பது ஒரு மோசமான விஷயம் அல்ல, ஆனால் எல்லா பணத்தையும் சாப்பிடுவது நிச்சயமாக மோசமான விஷயம் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் சுவந்திர தேவ் சிங் கூறுகிறார். இதனை தொடர்ந்து அதிகாரிகள்  இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறுகின்றனர். உடனே அமைச்சர் சுவந்திர தேவ் சிங் ஆவேசமாக, உனக்கு என்ன தெரியும்?, நீங்கள் பார்க்க வேண்டியதை பாருங்கள். கோடிக்கணக்கில் பணம் வந்தாலும் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என கூறுகிறார்.

அகிலேஷ் யாதவ்

இந்நிலையில், அந்த வீடியோவில், பணம் சம்பாதிப்பது ஒரு மோசமான விஷயம் அல்ல, ஆனால் எல்லா பணத்தையும் சாப்பிடுவது நிச்சயமாக மோசமான விஷயம் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் சுவந்திர தேவ் சிங் கூறுவதை குறிப்பிட்டு, உத்தர பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை அகிலேஷ் யாதவ் சுமத்தியுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், அமைச்சர் சுவந்திர தேவ் சிங் அதிகாரிகளுடன் பேசும் வீடியோவை பதிவேற்றம் செய்து,  பா.ஜ.க அமைச்சரின் பேச்சை கேளுங்கள், ஊழல் எப்படி இருக்கிறது எந்த வேலையும் நடக்காமல், முழு பணமும் கொட்டப்பட்டுள்ளது. இது மோசமான விஷயம் என பதிவு செய்துள்ளது.