ஆம் ஆத்மி கட்சி என்பது அரவிந்த் நடிகர்கள் கட்சி. குஜராத்தில் விளம்பரங்களுக்காக ஆம் ஆத்மி ரூ.36 கோடி செலவு.. காங்கிரஸ்

 
அஜோய் குமார்

ஆம் ஆத்மி என்பது அரவிந்த் நடிகர்கள் கட்சி, குஜராத்தில் விளம்பரங்களுக்காக ஆம் ஆத்மி ரூ.36 கோடி செலவிட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் அஜோய் குமார் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜோய் குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி என்பது அரவிந்த் நடிகர்கள் கட்சி. அந்த கட்சி ஊழலில் சிக்கியுள்ளது. பஞ்சாப் மற்றும் குஜராத் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. குஜராத் தேர்தல் செலவுக்காக பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பொதுமக்களின் பணத்தை சுருட்டியுள்ளது. கடந்த 2 மாதங்களாக குஜராத்தில் விளம்பரங்களுக்காக ஆம் ஆத்மி ரூ.36 கோடி செலவிட்டுள்ளது. 

ஆம் ஆத்மி

அதேவேளையில், பஞ்சாப் மற்றும் டெல்லியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாததற்கு நிதி பற்றாக்குறையே காரணம் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டுகிறது. நாங்கள் முன்வைக்கும் கேள்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக பதில் அளிக்க வேண்டும். குஜராத் விளம்பரங்களுக்காக ரூ.36 கோடியை ஆம் ஆத்மி பஞ்சாப் அரசின் நிதியிலிருந்து செலவிட்டதா இல்லையா?. அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.2 கோடி மதிப்பிலான கார் வாங்கவில்லையா?. டெல்லி முதல்வர் சமீபத்தில் வீட்டை சீரமைக்க ரூ.20 கோடி செலவிடவில்லையா?. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஆம் ஆத்மி ஆதரிக்கிறதா?. விஜய் நாயக் எங்கே?. 

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை எளிதாக்குவதற்காக பஞ்சாபிலிருந்து ஆம் ஆத்மிக்கு அபரிதமான பணம் அனுப்பப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு வந்த எளிய வாழ்க்கையிலிருந்து இப்போது வெகுதொலைவில் இருக்கிறார். தனியார் விமானத்தில் கெஜ்ரிவால் பறக்க செலவிடப்பட்ட ரூ.45 லட்சத்தை பஞ்சாப் அரசு செலவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.