ராகுல் காந்தியின் பொதுக் கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு இல்லை.. அஜித் பவார் தகவல்

 
36 மணி நேரத்துக்கு பிறகு டிவிட்டரில் மவுனத்தை கலைத்த அஜித் பவார்….சித்தப்பாதான் எங்க தலைவர்! .

மகாராஷ்டிரா  மாநிலம் ஷேகானில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு எனக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கவில்லை என்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: மகாராஷ்டிராவில் நவம்பர் 18ம் தேதியன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது, ஷேகானில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெய்ராம் ரமேஷ்

இந்நிலையில் ஷேகானில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பீா்களா என்று காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அஜித் பவார் கூறியதாவது: வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனக்கு காங்கிரஸிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

அதேசமயம், ராகுல் காந்தியின் கூட்டத்துக்கு எங்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தால், அவர்கள் அதற்கு செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.