யாரும் என்னை பேச விடாமல் தடுக்கவில்லை... நான் ரெஸ்ட் ரூம் தான் போனேன்.. அஜித் பவார் விளக்கம்

 
36 மணி நேரத்துக்கு பிறகு டிவிட்டரில் மவுனத்தை கலைத்த அஜித் பவார்….சித்தப்பாதான் எங்க தலைவர்! .

தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தின்போது, மேடையிலிருந்து வெளியேறிய விவகாரம் குறித்து, யாரும் என்னை பேச விடாமல் தடுக்கவில்லை, நான் ரெஸ்ட் ரூம் தான் போனேன்  என்று அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சரத் பவார் கட்சியின் தலைவராக மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸின் மகாராஷ்டிரா பிரிவு தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் சரத் பவார் மட்டுமே பேசினர். ஜெயந்த் பாட்டீல் பேசுவதற்கு அழைக்கப்பட்ட சில நிமிடங்களில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் மேடையை விட்டு வெளியேறினார்.

சரத் பவார்

தான் பேச அனுமதிக்க படாததால்தான் அஜித் பவார் மேடையிலிருந்து வெளியேறினார் என தகவல் வெளியானது. இது அந்த கட்சியில் மட்டுமல்லாது, மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இந்த விவகாரம் தொடர்பாக அஜித் பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அஜித் பவார் பதிலளிக்கையில் கூறியதாவது: தேசியவாத காங்கிரஸ் கட்சயின் தேசிய மாநாட்டில் மகாராஷ்டிரா மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் பேசினார். ஏனென்றால் இது போன்ற நிகழ்வுகளில் தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள்.

சலூன் கடைகளை திறக்க அனுமதி கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்…. மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரியா சூலே வேண்டுகோள்..

யாரும் என்னை பேச விடாமல் தடுக்கவில்லை. நான் கழிவறைக்கு சென்றேன், நான் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாதா?. ஊடகங்கள் உண்மையின் அடிப்படையில் செய்திகளை வெளியிட வேண்டும். மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை குறித்து பேச நான் இங்கு வந்துள்ளேன். நான் வருத்தப்படவில்லை, அதை முத்திரை தாளில் நான் எழுத வேண்டுமா?. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம், தேசியவாத காங்கிரஸ் மாநாட்டின்போது, சரத் பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சூலே தனது சகோதரர் அஜித் பவாரை மீண்டும் மேடைக்கு வர வற்புறுத்தியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.