ஓபிஎஸ் பக்கம் இருப்பது அதிமுகவினர் அல்ல; அமமுகவினர்- தங்கமணி

 
thangamani

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக இபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது எடுத்து இபிஎஸ் தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் இறுதித் தரப்பு வாதம் நிறைவடைந்து நீதிமன்ற தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை கலந்து இபிஎஸ் தரப்பு தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 
 

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இணைப்புகளை வழங்கி கொண்டாடினர். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கு சான்றாக நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் யாரும் ஓபிஎஸ் அணியில் இணையவில்லை. மாறாக அமமுகவில் இருந்து தான் இணைந்து வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் நியாயம் தங்கள் பக்கம் இருப்பதால் தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.