ஓபிஎஸ் பக்கம் செல்கிறேனா? செங்கோட்டையன் விளக்கம்

 
Sengottaiyan

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் தர்மம் வென்றுள்ளதாக செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கும் தடை விதித்துள்ளது. இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்பு அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சயை வெளிப்படுத்தினர். தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளான, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, செங்கோட்டையன் உட்பட ஏராளமான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், "பொதுக்குழு செல்லும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் தர்மம்  வென்றுள்ளது. இதனால் எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தான். அதிமுக தொண்டர்களுக்கு  இனி எந்த குழப்பத்திற்கு இடமில்லை. அதிமுகவில் என்றும் நான் நிலைத்து நிற்பேன், ஓபிஎஸ் தரப்பிற்கு செல்வேன் என்ற தடுமாற்றத்திற்கு இடமே இல்லை" என தெரிவித்தார்.