எடப்பாடி எல்லாம் தெரிந்தவர்; அவர் முதல்வராக வருவார்- செல்லூர் ராஜூ

 
 sellur raju

உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 

அப்போது பேசிய அவர், “இந்த தீர்ப்பு அதிமுக வெற்றி சரித்திரத்தில் மற்றொரு மகுடம். தொண்டர்கள் குழப்பம் நீங்கி தெளிவு பெற்று உள்ளார்கள். மக்கள் பணியே மகேசன் பணி.இந்த வெற்றியை எடப்பாடிக்கு சமர்ப்பிக்கிறோம்.
முல்லைபெரியாறு அணை  பிரச்சனையில் உள்ளார்ந்த முயற்சியை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.பேபி அணையில் மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒணம் பண்டிக்கை கொண்டாடும் நிலையில் ஒணம் பரிசாக முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரளா முதல்வர் கொடுக்க வேண்டும். இடைகால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி எல்லாம் தெரிந்தவர். எது நல்லது என அதை முடிவு செய்வார். தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளது.
மழை நன்றாக பெய்கிறது. ஆனால் தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை.

விரைவில் நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி வருவார். தீர்ப்பு நன்றாக வந்துள்ளது.எத்தனை பிரிவு இருந்தாலும் எது பெரிதோ அது தான் நிலைக்கும்.எடப்பாடி முதல்வராக வருவார். அதிமுக சாமனிய தொண்டனுக்கு கட்சி உருவாக்கப்பட்டது. சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் எடப்பாடி.காலத்திக்கு தகுந்தவாறு மாற்றம் கொண்டு வருவது தவறில்லை.பொதுகுழுவில் உறுப்பினர்கள் கட்சியை நிலை நிறுத்த இது போன்று நடவடிக்கை எடுத்தனர்..எடப்பாடியை கேப்டனாக உருவாக்கினார்கள்” எனக் கூறினார்.