கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே ஈபிஎஸ் இவ்வாறு செய்கிறார்- புகழேந்தி

 
pugalendhi

கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே ஓ.பி.எஸ் உடன் 100% இணைப்புக்கு வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Pugalendhi

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக ஒன்றாக இணைந்து விட வேண்டும் என்று தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் உட்பட எல்லோரும் விரும்பினார்கள் ", கொடநாடு வழக்கில் இருந்து தன்னை காத்துக்கொள்ளவே நூறு சதவீதம் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என  திட்டவட்டமாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் முடிவு குறித்து ஓ.பி.எஸ் வருத்தப்பட்டார். அதிமுகவை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி இந்த முடிவு எடுத்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓ.பி.எஸ் நிச்சயம் பங்கேற்பார், தீயசக்தி எடப்பாடி பழனிசாமி அருகில் உட்கார வேண்டிய நிலைமை ஏற்பட்டால் உட்கார்ந்து தான் ஆக வேண்டும்.

தேவர் ஜெயந்தி அன்று தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிய ஓ.பி.எஸ்க்கு தான் தகுதி உண்டு, எடப்பாடி பழனிசாமிக்கும் தேவருக்கும் என்ன தொடர்பு உள்ளது? சாதி என்ற போர்வையில் ஆர்.பி.உதயக்குமார் திண்டுக்கல் சீனிவாசன் பேசி வருகின்றனர். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சாதி இல்லாத கட்சியாக அதிமுகவை வழிநடத்தினர். எடப்பாடி பழனசாமி ஒரு போதும் பொது செயலாளர் ஆக முடியாது. காலம் வரும் போது நிச்சயம் கட்சி தலைமை அலுவலகத்துக்கு செல்வோம்" என தெரிவித்தார்.