எங்கள் கட்சியில் இருந்து 40 துரோகிகள் ஒடி விட்டனர்... ஷிண்டை ஆதரவு சிவ சேனா எம்.எல்.ஏ.க்களை தாக்கிய ஆதித்யா தாக்கரே

 
ஆதித்யா தாக்கரே

எங்கள் கட்சியில் இருந்து 40 துரோகிகள் ஒடி விட்டனர் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆதரவு சிவ சேனா எம்.எல்.ஏ.க்களை உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தாக்கினார்.

மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிவ சேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளிப்பதாக கிளர்ச்சியில் ஈடுபட்டதால்,  அந்த கட்சி இரண்டாக உடைந்தது. மேலும் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது. மேலும் ஏக்நாத் ஷிண்டை தலைமையிலான சிவ சேனா பிரிவும்- பா.ஜ.க.வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் உத்தவ் தாக்கரே மகனும், முன்னாள் மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரே பேசுகையில் கூறியதாவது:  அந்த (சிவ சேனா பிரிந்தது) பழியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நானும் என் தந்தையும் அவர்களை (கிளர்ச்சியாளர்கள்) கண்மூடித்தனமாக நம்பினோம். அவர்களை எங்கள் மக்களாகவே நினைத்தோம். 

ஏக்நாத் ஷிண்டே

கடந்த 40-50 ஆண்டுகளில் எந்த முதல்வரும் விட்டுக் கொடுக்காத நகர்ப்புற வளர்ச்சி போன்ற துறைகளை அவர்களுக்கு வழங்கிய பிறகும் அவர்கள் எங்களுடன் இருப்பார்கள் என்று நாங்கள் நினைத்தோம். அவர்களை கண்மூடித்தனமாக நம்பலாம் என்றும் முதுகில் குத்தமாட்டார்கள் என்றும் நினைத்தோம். விசாரணை நோட்டீஸ் அனுப்பியும், போலீஸ்காரர்களை வைத்து கண்காணித்தும் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்யாதவர்கள் நாங்கள். சொந்த மக்களை உளவு பார்க்காதவர்கள் நாங்கள். அது எங்கள் தவறு. அரசியல் மிகவும் அழுக்கான இடம் அல்ல அல்லது நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஒவ்வொரு முறையும் நீங்கள் சகதியில் ஓடவோ அல்லது சகதியில் அழுக்காகவோ இருக்க வேண்டியதில்லை என்று நாங்கள் நினைத்தோம். எனவே அது எங்கள் தவறு. 

பா.ஜ.க.

அவர்களை (பா.ஜ.க.) போல  மோசமான அரசியலை விளையாடாதற்கு நான் பொறுப்பேற்கிறேன். சிவ சேனாவையும், மகாராஷ்டிராவையும் சேதப்படுத்துவதே அவர்களின் (சிவ சேனா கிளர்ச்சியாளர்கள்) ஒரே நோக்கம். நாடு முழுவதும் பல பாலாசாகேப் உள்ளனர். என்னை பொறுத்தவரை, ஒரு நெருக்கடி இருக்கிறதா என்பது இனி ஒரு கேள்வி அல்ல, ஏனென்றால் நாங்கள் அதை எதிர்த்து போராடுகிறோம். எங்கள் கட்சியில் இருந்து 40 துரோகிகள் ஒடி விட்டனர். இன்று எனக்கு முக்கியமானது, நமது அரசியலமைப்பின் இலட்சியங்களுக்கு என்ன நடக்கிறது, ஜனநாயகத்திற்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதிக்கு என்ன நடக்கிறது என்பதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.