ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், ஆளும் கட்சியினர் அஞ்சுகின்றனர்.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என தகவல்..

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், ஆளும் கட்சியினர் அஞ்சுகின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தின் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், கோவிட் நெறிமுறைகளை பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால், தேசிய நலன் கருதி, பொது சுகாதார  அவசர நிலையை கருத்தில் கொண்டு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை காங்கிரஸ் மட்டுமின்றி பிற கட்சிகளும் விமர்சனம் செய்துள்ளன. காங்கிரஸின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், ஆளும் கட்சியினர் அஞ்சுகின்றனர். 

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

மத்திய அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காக, இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மத்திய அரசு கவனத்தை திசை திருப்புகிறது. 2022 குஜராத் சட்டப்பேரவை தேர்தல்களின்போது பிரதமர் நரேந்திர மோடி கோவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றினார்களா என்று பா.ஜ.க.விடம் கேட்க விரும்புகிறேன். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மன்சுக் மாண்டவியா விரும்பவில்லை என்று நினைக்கிறேன். பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப திருப்புவதற்காக மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மன்சுக் மாண்டவியா

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.டோலா சென் கூறுகையில், அவர்கள் ஒரு ஆலோசனையை வழங்கியிருக்கலாம். நாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறோம். ஆனால் முககவசம் அணிவதற்கோ அல்லது தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கோ எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. மாநில அரசுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது மட்டுமே மத்திய அரசின் கடமை அல்ல. அவர்களின் பொறுப்பு பொதுமக்களை நோக்கி உள்ளது அதில் அவர்கள் தோல்வியடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.