உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள் மீது அரசாங்கம் அக்கறையின்மை, அலட்சியத்தை வெளிப்படுத்தியது.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மீது அரசாங்கம் அனைத்து வகையான அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் நாளிலிருந்தே மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

மேற்கு வங்க காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி… தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம்..

ஆனால் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் மீது அரசாங்கம் அனைத்து வகையான அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டியுள்ளது. வெளியேறற்த்திற்கு (இந்தியர்கள் மீட்பு) முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரத்தில் அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தது. இது போன்ற முக்கியமான விஷயத்தை கையாள்வதில் தற்போதைய அரசாங்கம் முழு அலட்சியம் காட்டுகிறது. 

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் தீர்க்கதரிசன கணிப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். நாட்டின் சாமானிய மக்களை பிரதமர் மோடி தவறாக வழிநடத்த வேண்டாம். நமது நாட்டின் ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டார் நிலப்பரப்பு சின ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. சீனாவுடனான எல்லையை பாதுகாக்க அரசு தவறி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.