மம்தா பானர்ஜி மாற்றி மாற்றி பேசுகிறார்.. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டு.

 
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி சில சமயங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராகவும், சில சமயங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸூக்கு எதிராகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், சில சமயங்களில் காங்கிரஸை முடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் என ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமையன்று பா.ஜ.க. அல்லாத முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதினார். அந்த கடிதத்தில், அடக்குமுறை பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து போராட தேசத்தின் முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டின் நிறுவன ஜனநாயகத்தின் மீது ஆளும் பா.ஜ.க.வின் நேரடி தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்க நான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். மத்தியிலும்,பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

பா.ஜ.க.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தொடர்பாக மம்மா பானர்ஜி தனது நிலைப்பாட்டை மாற்றுவது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி  இது தொடர்பாக கூறியதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில சமயங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராகவும், சில சமயங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸூக்கு எதிராகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், சில சமயங்களில் காங்கிரஸை முடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

அவரது அறிக்கைகள் இரவும், பகலும் மாறுகின்றன. உயர் நீதிமன்றத்தில் பிர்பூம் வன்முறை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரினோம். பிர்பூம் வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ்  சிக்கி தவிப்பதால் தீதி (சகோதரி) பயப்படுகிறார். அதனால்தான் அனைவரையும் அழைக்கிறார். மேற்கு வங்க அரசால் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை? அவர் வீட்டில் வேலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.