உக்ரைனில் சிக்கியுள்ளவா்களை மீட்பதை விட தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதில் பா.ஜ.க. அரசாங்கம் ஆர்வம்.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

உக்ரைனில் சிக்கியுள்ளவா்களை சரியான முறையில் வெளியேற்றும் திட்டத்தை உருவாக்குவதை விட, ஐந்து மாநிலங்களில் நடந்து வரும் சட்டப்பேரவை தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதில் பா.ஜ.க. அரசாங்கம் அதிக ஆர்வமாக உள்ளது 

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல் காரணமாக இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்தும் நோக்கில், ஜோதிராதித்ய சிந்தியா உள்பட 4 மத்திய அமைச்சர்களை உக்ரைனின் பக்கத்து நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பியது. இந்திய விமான படை விமானங்களும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு வங்க காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி… தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம்..

உக்ரைனில் சிக்கியுள்ளவா்களை சரியான முறையில் வெளியேற்றும் திட்டத்தை (மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கை)  உருவாக்குவதை விட, ஐந்து மாநிலங்களில் நடந்து வரும் சட்டப்பேரவை தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதில் பா.ஜ.க. அரசாங்கம் அதிக ஆர்வமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டி இருந்தார்.

மோடி

இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவின் உயரும் சக்தி காரணமாக உக்ரைனில் இருந்து நம் குடிமக்களை நம்மால்  வெளியேற்ற முடியும். உக்ரைனில்  இருந்து குடிமக்களை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான எந்த முயற்சியையும் இந்தியா விடாது என்று தெரிவித்தார். ரஷ்யாவின் ராணுவ தாக்குதலால் உக்ரைனில் நிலைமை தொடர்ந்து மோசமாக இருப்பதால், பிரதமர் மோடி கடந்த 3 தினங்களில் 4 உயர்மட்ட கூட்டங்களை நடத்தி, அங்குள்ள நிலைமை குறித்து ஆலோசனை, ஆப்ரேஷன் கங்கா நடவடிக்கையின் கீழ் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்கும் முயற்சிகளை ஆய்வு செய்தார்.