பாஜகவை எதிர்ப்பதால் என்னுடன் பேச நடிகர்கள் பயப்படுகிறார்கள்- பிரகாஷ்ராஜ்

 
p


பாஜகவை எதிர்ப்பதால் என்னுடன் பேச நடிகர்கள்,  டெக்னீசியன்கள் பயப்படுகிறார்கள்.  என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை. அதனால் எனக்கு பட வாய்ப்புகள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.  என்னிடமும்  வசதியும் வலிமையும் இருக்கிறது  என்று கூறி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

pr

 பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்,  நடிகர் பிரகாஷ்ராஜின் நலம் விரும்பியதாக இருந்தார்.   அவர் சுட்டுக் கொல்லப்பட்டதும்  இந்த விவகாரத்தில் மௌனம் காத்து பிரதமர் மோடியை,  பிரகாஷ்ராஜ் தொடர்ந்து கேள்வி கேட்டார்.  பாஜகவை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார் பிரகாஷ்ராஜ்.

 கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.  பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து தனது கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் பிரகாஷ்ராஜ்.

go

 இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்திருக்கும் ஒரு பேட்டியில்,    பல நடிகர்கள் ,டெக்னீசியன்கள் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை.  அரசியலில் நான் ஒரு நெருப்பு பிராண்டாக இருப்பதால் அவர்கள் பயப்படுகிறார்கள்.  என் அரசியல் நடவடிக்கைகளால்  என் பணி  பாதிக்கப் படுகிறது.   அதற்காக நான் அரசியலை தூக்கி வீசி விட முடியாது.   வேண்டுமென்றால் என் பணியை விட்டு ஒதுங்கி இருக்கலாம் .  அந்த அளவுக்கு வசதியும் வலிமையும் எனக்கு இருக்கிறது.

ppp

  பல நடிகர்கள் என்னிடம் பேசுவதில்லை.  என்னிடம் பேச பயப்படுகிறார்கள்.   அதற்காக நான் வருத்தப்படவில்லை .  ஒரு பிரச்சனைக்கு எதிராக பேசுவது அந்த கலைஞர்களை பாதிக்கும் என்பதால் அவர்களை நான் குறை சொல்லவும் இல்லை.   இப்பொழுது தான் நான் இன்னும் சுதந்திரமாக உணர்கிறேன் .  ஏனென்றால் நான் எனக்கு குரலை உயர்த்தாமல் இருந்திருந்தால் என் படங்களின் காரணமாக நான் ஒரு நல்ல நடிகராக மட்டுமே அறியப்பட்டிருப்பேன்.  ஆனால் நான் இல்லாமல் போகும்போது நல்ல மனிதனாகவும் பிரகாஷ்ராஜ் இருந்தான் என்று சொல்ல வேண்டும்.  அதைத்தான் நான் விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.