நடிகர் திலகம் மகனின் ஆராய்ச்சி! பாராட்டும் டெல்லி

 
r

தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பிரதமர் மோடியையும், பாஜக தலைமையையும் பாராட்டி வரும் நிலையில், பாஜக டெல்லி தலைமை ஒரு தமிழ் நடிகரின் வாரிசை பாராட்டி வருகிறது. 

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வாரிசு ராம்குமார், கடந்த ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார்.  அதன்பின்னர் பாஜகவில் இவரின் பங்கு பெரிதாக இல்லை என்பது மாதிரியான ஒரு பார்வை இருக்கிறது. பாஜக கூட்டங்களிலும் இவரின் தலை அதிகம் பார்க்க முடிவதில்லை.

rr

ஆரவாரம் இல்லாமல் இருந்தாலும் அமைதியாக தன் வேலையை செய்து வந்ததால் டெல்லி தலைமையும் இவரை பாராட்டுகிறது என்கிறார்கள்.

தமிழ்நாடு கலாச்சாரம், பண்பாடு,  தமிழ்நாட்டு அரசியல், என இங்கிருக்கும் நடப்புகளை எல்லாம் ஆங்கிலத்தில் சுருக்கமாக அனுப்பிக் கொண்டிருக்கிறாராம்.  இதை தொடர்ந்து தவறாமல் செய்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

தருமபுரம் ஆதீனம் பட்டினபிரவேசம் விவகாரம் வரைக்கும் அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறார். இதனால் டெல்லி பாஜக தலைவர்களுக்கு ராம்குமார் மீது நல்ல அபிப்ராயம் இருக்கிறது என்கிறார்கள். 

தமிழ்நாட்டு நடப்புகளை ஆங்கிலத்தில் சுருக்கமாக அனுப்பி வந்த ராம்குமார்,  இந்தியாவின் புராதன வாரணாசி விஸ்வநாதர் கோயிலை ஆராய்ச்சி செய்திருக்கிறார்.  விஸ்வநாதர் கோயிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகா சாதுக்கள் எப்படி பாதுகாத்து வந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து, அது தொடர்பான விபரங்களையும் டெல்லி பாஜக தலைவர்களுக்கு அனுப்பி இருக்கிறார் ராம்குமார். அதைப்படித்து பார்த்த டெல்லி தலைவர்கள் பலரும் ராம்குமாரை பாராட்டி வருகிறார்களாம்.