“சசிகலாவின் காலில் விழுந்து அவரோடு இணைந்து அதிமுகவில் பயணிக்க தயார் என ஓபிஎஸ் கூறினார்”
சசிகலாவின் காலில் விழுந்து அவரோடு இணைந்து அதிமுகவில் பயணிக்க தயார் என ஒபிஎஸ் தெரிவித்ததாக சசிகலா ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஒபிஎஸ் இல்லத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான ஆவின் வைத்தியநாதன் சந்தித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் செய்தி நிறுவனமான news j தற்போது பாஜகவிற்கு தாரைவார்த்து விட்டனர். தற்போது பாஜக நிறுவனமாக மாறியுள்ள news j ஒற்றை தலைமை க்கு எடப்பாடிக்கு ஆதரவு தரும்படி பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதிமுக வின் செய்தி நிறுவனத்தையே பாஜக விற்கு தாரைவார்த்துள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை அதிமுக கட்சியை பாஜகவிற்கு தாரை வார்க்க மாட்டார் என்பது என்ன நிச்சயம். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான நாங்கள் ஒபிஎஸ்க்கே ஆதரவு. எங்கள் எண்ணம் தான் சின்னம்மாவின் எண்ணம். பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா என்ற கேள்விக்கு நாங்களும் அதிமுக தான் நாங்கள் இல்லாமல் பொதுக்குழு செயற்குழு கூடிவிடுமா என்றவர் சின்னம்மா விருப்பட்டால் ஒன்றரை கோடி தொண்டர்களோடு பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வோம்.
ஓபிஎஸ் சந்தித்து அவருடன் பேசியபோது எடப்பாடியுடன் பயணிப்பதற்கு சசிகலாவின் காலில் விழுந்து அவரோடு அதிமுகவில் இணைந்து பயணிக்கலாம் என தெரிவித்தார்” எனக் கூறினார்.