மகாராஷ்டிராவை ஐந்தாக பிரிக்க விரும்புகிறார்கள்.. ஆதித்யா தாக்கரே பகீர் தகவல்

 
பால் தாக்கரே குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ.! வருங்கால முதலமைச்சர்! ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிராவை ஐந்தாக பிரிக்க விரும்புகிறார்கள் என்று மாநில மற்றும் மத்திய அரசுகளை  ஆதித்யா தாக்கரே மறைமுகமாக  குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அம்மாநில முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரே கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே பேசுகையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை மறைமுகமாக தாக்கினார்.

பா.ஜ.க.

அந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே கூறியதாவது: உத்தவ் ஜி முதல்வராக இருந்தபோது, தாங்கள் பாரபட்சம் காட்டப்படுவறதாக யாரும் உணரவில்லை. ஆனால் இப்போது வேண்டுமென்றே பிராந்தியவாதம் கொண்டு வரப்படுகிறது. மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் மகாராஷ்டிராவை வீழ்த்தி ஜந்தாக பிரிக்க விரும்புகிறார்கள். 

பகத் சிங் கோஷ்யாரி

சமீபத்தில் கவர்னர் (பகத் சிங் கோஷ்யாரி) என்ன சொன்னார் தெரியுமா? தேர்தல் நடைபெற உள்ள தானே மற்றும் மும்பையின் பெயர்களை அவர் வேண்டுமென்றே எடுத்தார். பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. ஆனால் மக்கள் கவனம் செலுத்தும் ஒரே விஷயம் அரசியல் மற்றும் பிற கட்சிகள் மற்றும் அவர்களின் எம்.எல்.ஏ.க்களை உடைப்பதில் மட்டுமே. தவறுகளுக்கு எதிராக குரல் எழுப்புவர்கள் ஒடுக்கப்பட்டு குறிவைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.