இறந்து போன அரசியல்கட்சிகளை பற்றி நான் பேசுவதில்லை.. ராஜ் தாக்கரே கட்சியை கிண்டலடித்த மருமகன் ஆதித்யா

 
பால் தாக்கரே குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ.! வருங்கால முதலமைச்சர்! ஆதித்யா தாக்கரே

இறந்து போன அரசியல் கட்சிகளை பற்றி நான் பேசுவதில்லை என தனது மாமா ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியை  ஆதித்யா தாக்கரே கிண்டல் செய்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே நேற்று முன்தினம் கடிதம் ஒன்று எழுதினார். அந்த கடிதத்தில், மாநில அரசுக்கு நான் ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். எங்கள் பொறுமையின் எல்லையை காணாதீர்கள். அதிகாரம் வரும் போகும். அதிகாரத்தின் செப்பு தகட்டை யாரும் கொண்டு வரவில்லை. உத்தவ் தாக்கரே, நீங்கள் கூட இல்லை. மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை அகற்றுவதில் மகாராஷ்டிரா அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒலி பெருக்கிகள் செல்ல (அகற்றப்பட) வேண்டும். பல ஆயிரம் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தொண்டர்களுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியதோடு, அவர்களை காவலில் வைத்து துன்புறுத்தப்படுகின்றனர் என குறிப்பிட்டு இருந்தார்.

ராஜ்தாக்கரே

ராஜ் தாக்கரே கடிதம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு மகாராஷ்டிரா அமைச்சரும், அவரது மருமகனுமான ஆதித்யா தாக்கரே பதிலளிக்கையில், செத்து போன அரசியல் கட்சிகளை பற்றி நான் பேசுவதில்லை. அரசியல் அல்ல வளர்ச்சி பற்றி பேச வேண்டும் என்று முடித்து விட்டார். ஆதித்யா தாக்கரேவின் பதில் மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் பாட்டீல் கூறுகையில், காவல்துறையின் தங்கள் வேலையை செய்கிறார்கள். நிலத்தின் ஆட்சியை மீறும் குற்றவாளிகளை கைது செய்ய ராஜ்தாக்கரே அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

அதேசமயம், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவேந்திர பட்னாவிஸ் ராஜ் தாக்கரேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், அனுமன் கீா்த்தனைகளை பாடியதற்காக தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் மக்களை சிறையில் தள்ளும் அரசாங்கத்திடம் இருந்து அவர் அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. ராஜ் தாக்கரேவும் போராட வேண்டும் என தெரிவித்தார்.